பிரித்தானியாவுக்குள் நுழையும் புதிய பாதுகாப்பு அமைப்பு
பிரித்தானியா 6 புதிய Land Ceptor வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இவை Sky Sabre எனப்படும் மேம்பட்ட வான்வழி பாதுகாப்பு அமைப்பின் முக்கிய பகுதியாகும். இந்த அமைப்பு ஒரே நேரத்தில் 24 ஏவுகணைகளை வழிநடத்தி தனித்தனியாக தாக்கும் திறன் கொண்டது.
இதன் சிறப்பு அம்சம், ஒலியை விட 2 மடங்கு வேகத்தில் (Mach-2) பயணிக்கும் ஒரு டென்னிஸ் பந்து அளவுள்ள பொருளைக்கூட துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
பாதுகாப்பு அமைப்பு
இது mid-range பாதுகாப்பு அமைப்பாக பிரித்தானிய இராணுவத்திற்கு வழங்குனப்படுகிறது. இந்த ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்.
இத்திட்டத்தின் மூலம், நாட்டின் 14 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது. MBDA UK நிறுவனம் இந்த பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இத்திட்டம் தொழில்துறையின் வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவியாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
NATO கூட்டமைப்பு
Sky Sabre பாதுகாப்பு அமைப்பில், ரேடார், கட்டுப்பட்டு மையம் மற்றும் ஏவுகணை லாஞ்சர் ஆகிய 3 முக்கிய கூறுகள் உள்ளன.
இது விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் கிரூஸ் ஏவுகணைகளை எதிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா, NATO கூட்டமைப்பில் தனது பங்களிப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 13 மணி நேரம் முன்
