பிரித்தானியாவில் பணிபுரிவோருக்கு அடித்த அதிஷ்டம் : அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளம்
பிரித்தானியாவில் (United Kingdom) முழு நேரப் பணி செய்வோருக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல், தேசிய வாழ்வாதார ஊதிய உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் முழு நேரப்பணி செய்வோருக்கு இந்த மாதம் முதல் 117 பவுண்டுகள் ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
முழு நேரப்பணி
இந்தநிலையில், 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு மணி நேர ஊதியம் 11.44 பவுண்டுகளிலிருந்து 12.21 பவுண்டுகளாக உயர உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, 18 முதல் 20 வயதுடையவர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியமானத ஒரு மணி நேரத்துக்கு 8.60 பவுண்டுகளிலிருந்து 10.00 பவுண்டுகளாக உயர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு
இதன்படி, கடினமாக உழைக்கும் மூன்று லட்சம் குறைந்த வருவாய் கொண்ட பணியாளர்களுக்கு இந்த ஊதிய வழங்கப்படுவதாக பிரித்தானிய துணைப் பிரதமரான ஏஞ்சலா ரேய்னர் தெரிவித்துள்ளார்.
இந்த குறைந்தபட்ச ஊதிய உயர்வு காரணமாக, தோராயமாக, ஆண்டொன்றிற்கு 1,400 பவுண்டுகள் முதல் 2,500 பவுண்டுகள் வரை பணியாளர்கள் பெற உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
2 நாட்கள் முன்