புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானிய அரசு எடுத்த தீர்மானம்
பிரித்தானியாவில் மிதக்கும் படகுகளில் தங்கவைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களை வீடுகளில் தங்கவைக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தீர்மானித்துள்ளன.
முந்தைய கன்சர்வேட்டிவ் அரசு, பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் புகலிடக்கோரிக்கையாளர்களை Portland என்னுமிடத்தில் நிறுத்தப்பட்டுள்ள, பிபி ஸ்டாக்ஹோம் (Bibby Stockholm) என்னும் மிதக்கும் படகில் தங்கவைத்தது.
புகலிடக்கோரிக்கையாளர்கள்
எனினும், புதிய லேபர் அரசோ, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் அவர்களை ஹொட்டல்கள் மற்றும் வீடுகளில் குடியமர்த்த முடிவு செய்துள்ளது.
அவர்களில் சுமார் 400 பேர் தற்போது அந்த படகுகளிலிருந்து வெளியேற்றப்பட இருக்கிறார்கள்.
Britons Furious சிலர் Wolverhampton என்னுமிடத்திலுள்ள விடுதி ஒன்றிலும், மற்றவர்கள் Worksop என்னுமிடத்தில் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த முடிவு உள்ளூர் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானிய அரசின் தீர்மானம்
கன்சர்வேட்டிவ் கட்சி கவுன்சிலரான ஃப்ரேசர் மெக்ஃபார்லேண்ட் (Fraser McFarland) என்பவர்,“ இது அதிர்ச்சியளிக்கவைக்கும் துரோகம்.
எங்கள் மக்களுக்கு சரியான வீடுகள் இல்லை, அவர்கள் குளிரில் அவதியுறும்போது, லேபர் அரசு சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை Bassetlawவிலுள்ள வீடுகளில் குடியமர்த்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “உள்ளூரில் வாழும் எங்கள் குடும்பங்கள் தங்க சரியான வீடில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை.
ஆனால், எங்களுக்கு முன்னால் இந்த புலம்பெயர்ந்தோருக்கு வீடுகள் கொடுக்கப்படுவதைப் பார்க்கிறோம்” என்று உள்ளுர்வாசி ஒருவர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |