குழந்தைகளுக்கான மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா
ஐரோப்பாவில் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியற்ற நாடாக பிரித்தானியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2024ஆம் ஆண்டின் "Good Childhood" அறிக்கையின் படி, போலந்து (24.4%) சதவீதமும் மற்றும் மால்டா (23.6%) சதவீதமும் பெற்றுள்ள நிலையில், பிரித்தானியா (25.2%) சதவீதத்தை பெற்று மிக மோசமான இடத்திலுள்ளது.
குழந்தைகள் நல குறைவிற்கான காரணம்
பிரித்தானியாவில் 11 சதவீத குழந்தைகள் போதிய உணவின்மை காரணமாக உணவை தவிர்ப்பதாகவும் இவற்றில் 50 சதவீதமானவர்கள் பொழுதுபோக்குச் செயல்பாடுகளில் ஈடுபட முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, விலைவாசி உயர்வு, சமூக குற்றச்செயல்கள் மற்றும் பள்ளி வாழ்வில் ஏற்பட்டிருக்கும் அழுத்தங்கள் இளைஞர்களின் நலனை மேலும் பாதிப்படைய செய்வதுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பிரித்தானியாவில், பள்ளி மாணவர்கள் பலர் குற்றச்செயல்கள் மற்றும் பழிவாங்கல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
அதில், 14.3 சதவீதம் மாணவர்கள் தங்கள் பள்ளி அனுபவத்தில் திருப்தியில்லையென்று கூறியுள்ளனர்.
குழந்தைகளின் மனநலப் பிரச்சினை
அத்துடன், பிரித்தானியாவில் குழந்தைகளின் மனநலப் பிரச்சினைகளும் அதிகரித்துள்ள நிலையில், 2.7 லட்சம் குழந்தைகள், தாங்கள் கொண்ட மனநலப் பிரச்சினைகளுக்கு உதவி பெற காத்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நெதர்லாந்து, பின்லாந்து மற்றும் டென்மார்க் போன்ற நோர்டிக் நாடுகள் சிறுவர் நலனில் சிறப்பாக செயல்படுகின்றன.
இந்நிலையில், அங்கு வாழ்க்கை திருப்தியின்மை (10.8% - 11.3%) சதவீதமாக பதிவாகியுள்ள நிலையில் பிரித்தானியா மற்றும் போலந்து போன்ற நாடுகளில் வாழ்க்கை திருப்தியின்மை சதவீதம் அதிகமாகவே காணப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |