பிரித்தானிய அரசாங்கத்தின் சர்வதேச மாணவர்களுக்கான மகிழ்ச்சித் தகவல்
பிரித்தானிய அரசாங்கம் சர்வதேச மாணவர்களுக்கு விசா தொடர்பான மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
2025 நவம்பர் 25 முதல், மாணவர்கள் தாங்கள் வைத்திருக்கும் Student Visa விலிருந்து நேரடியாக Innovator Founder Visa க்கு நாட்டை விட்டு வெளியேறாமல் மாறிக்கொள்ளலாம் என புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
Innovator Founder Visa மூலம் வெளிநாட்டு மாணவர்கள் பிரித்தானியாவில் புதிய வணிகங்களை தொடங்கவும், மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
தொழில் முயற்சி
இதற்கு, மாணவர்கள் முன்மொழியும் வணிக யோசனை அங்கீகரிக்கப்பட்ட ஒரு endorsing body மூலம் ஆதரிக்கப்பட வேண்டும்.அதேசமயம், விசாவிற்கான அனைத்து தகுதி நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

முன்பு, Innovator Founder Visa-விற்கு விண்ணப்பிக்க மாணவர்கள் நாடு விட்டு வெளியேறி மீண்டும் நுழைய வேண்டியிருந்தது.
ஆனால் புதிய விதிமுறையால், நாட்டிலேயே இருந்தபடி அவர்கள் தொழில் முயற்சிகளை தொடங்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
முக்கிய முன்னேற்றம்
Start-up Visa முறையை நிறுத்தி, அதற்குப் பதிலாக இந்த Innovator Founder Visa-வை ஊக்குவித்து வரும் பிரித்தானிய அரசு, பல்கலைக்கழகங்களில் பயிலும் திறமையான சர்வதேச மாணவர்கள் படிப்பை முடித்த பின் நாட்டிலேயே தொழில் தொடங்குவதற்கு கூடுதல் வாய்ப்பளிக்கிறது.

இந்த நிலையில், Innovator Founder Visa க்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் மாணவர் கட்டமாயமாக Student Visa வைத்திருக்க வேண்டும்.
இந்த மாற்றம், White Paper 2025 பரிந்துரைக்கப்பட்டபடி, பிரித்தானியாவில் படிக்கும் மாணவர்களின் தொழில் முனைவுத் திறனை ஊக்குவிக்கும் முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |