ஈரானிய துறைமுகங்களின் முற்றுகைக்கு ஆதரவில்லை : பிரித்தானியா அதிரடி அறிவிப்பு
ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிடுவதை பிரித்தானியா ஆதரிக்கவில்லை என்று அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
முடிந்தவரை விரைவாக எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்கு அதுவே வழி என்பதால் ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறப்பதில் பிரித்தானியாவின் கவனம் உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பிரித்தானியாவின் எரிசக்தி கட்டணங்களில் ஏற்பட்ட பாதிப்பிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தனிப்பட்ட முறையில் பொறுப்பாக்குகிறீர்களா என்ற கேள்விக்கு ஸ்டார்மர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை என பிபிசி குறிப்பிட்டுள்ளது.
ஜலசந்தியைத் திறப்பதற்கு நாடுகளை ஒன்றிணைத்தல்
பதற்றத்தைத் தணிப்பதற்கும் ஜலசந்தியைத் திறப்பதற்கும் நாடுகளை ஒன்றிணைப்பதே தன்னால் செய்யக்கூடிய மிக முக்கியமான ஒரே விடயம் என்று அவர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வளைகுடா வழியாகப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்குக் காரணம் ஈரான்தான் எனவும், ஈரானுக்கு எதிரான இந்தப் போரில் பிரித்தானியா இழுத்துச் செல்லப்படவில்லை என்றும் ஸ்டார்மர் மேலும் தெரிவித்தார்.
ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிடும் நடவடிக்கை மற்ற அமெரிக்க நட்பு நாடுகளாலும் விமர்சிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |