ஹமாஸை ஆதரித்த ஊடகவியலாளருக்கு விசா இரத்து
பிரித்தானியாவின் லண்டன் நகரில் சுமார் 3,00,000 இலட்சம் மக்கள் காசா மீதான தாக்குதலையும், இஸ்ரேல் - ஹமாஸ் போரையும் நிறுத்த வேண்டும் என பதாகைகளை ஏந்தி பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த பேரணிக்கு எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் மொடாஸ் மாதார் (Moataz Matar) ஆதரவு தெரிவித்த நிலையில், அவருடைய விசாவை பிரித்தானிய உள்துறை அலுவலகம் இரத்து செய்துள்ளது.
யூத-விரோத நடத்தை
இதனைத் தொடர்ந்து தங்கள் யூத-விரோத நடத்தை குறித்து எச்சரிக்கப்பட்ட பின்னர், உள்துறை அலுவலகத்தால் அவர்களது விசாவை இரத்து செய்யக்கூடிய குறைந்தபட்சம் 6 வெளிநாட்டவர்களின் ஒருவராக மொடாஸ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஜென்ரிக் இதுகுறித்து ஊடகத்திடம் கூறுகையில்,
''விசாவின் சிறப்புரிமையை பிழையான முறையில் பயன்படுத்தி முரண்பாடுகளை தோற்றுவிக்கும் செயல்களை அங்கீகரிக்கும், வகையில் பிரித்தானியாவுக்கு வருபவர்களுக்கு எவ்வித பாரபட்சமும் வழங்கப்படமாட்டாது'' என தெரிவித்திருந்தார்.
இதன்மூலம் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சால் விசா இரத்து செய்யப்பட்ட முதல் வெளிநாட்டவராக மொடாஸ் கருதப்படுகிறார்.