காஷ்மீர் தாக்குதலின் எதிரொலி : பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு
பிரித்தானியா தனது குடிமக்களை பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏப்ரல் 22 ஆம் திகதி ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், ,இது தொடர்பில் அறிவிப்பை அந்நாட்டு அரச வெளியிட்டுள்ளது.
வெளிப்படையான விசாரணை
இதன்படி, பிரித்தானிய வெளிவிவகார, பொதுமக்கள் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) பாகிஸ்தானின் பல பகுதிகளிலும், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு 10 கிமீ சுற்றுவட்டத்திலும் பயணிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளது.
இது Khyber Pakhtunkhwa, Balochistan, பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் உள்ளிட்ட பல அபாயகரமான பகுதிகளைக் கொண்டுள்ளது.
அத்தோடு, பயண எச்சரிக்கைக்கு எதிராக பயணிப்பது, பயணக் காப்பீட்டை செல்லாததாக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு செல்லும் இந்திய உள்ளகப் பயணங்களுக்கும், Srinagar, Pahalgam, Gulmarg போன்ற பிரபல சுற்றுலா பகுதிகளுக்கும் “பயணிக்கவே கூடாது” எனும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலியாவும் இதேபோன்ற பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
