உக்ரைன் அதிபர் அமெரிக்கா விஜயம்; வெள்ளை மாளிகையில் ஜோ பைடனை சந்திக்கிறார்!
உக்ரைன் அதிபர் அமெரிக்கா அதிபரைச் சந்திப்பதற்கு அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் தொடங்கியதற்குப் பின் உக்ரைன் அதிபர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
யுக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலேன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இடையிலான சந்திப்பு வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ளது.
உக்ரைன் அதிபரின் அமெரிக்கா விஜயம்
உக்ரைன் அதிபரின் அமெரிக்கா விஜயமானது, ஜோ பைடன் மற்றும் அமெரிக்க உயர் நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்பாக இருப்பதுடன், உக்ரைனுக்கான புதிய பாதுகாப்பு உதவியைக் கோருவதாக இருக்கும் என அமெரிக்க செய்தி நிறுவனமான சி.என்.என் தெரிவித்துள்ளது.
முக்கிய சந்திப்புக்கள் மற்றும் பாதுகாப்புக் காரணங்கள் காரணமாக குறித்த சந்திப்புத் தொடர்பான விடயங்களை வெள்ளை மாளிகை இன்னும் வெளியிடவில்லை.
அமெரிக்கா நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் உரை
இதேவேளை, அமெரிக்கா நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலேன்ஸ்கி உரையாற்றுவார் எனக் கூறப்பட்டுள்ளது, இருப்பினும் சபாநாயகர் நான்சி பெலோசி இதனை இன்னும் உறுதி செய்யவில்லை.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
