உக்ரைனின் திரையரங்கில் ரஷ்ய விமானப் படை மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சிப் பின்னணி!
உக்ரைனில் திரையரங்கம் மீது நேற்றைய தினம் ரஷ்யா கொடூரமான விமானத்தாக்குதலை மேற்கொண்டிருந்தது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி பின்னணி ஒன்று வெளியாகியுள்ளது. ரஷ்ய படையினரின் தாக்குதலுக்கு பயந்து குறித்த திரையரங்கத்தில் சிறார்களுடன் சுமார் 1,200 உக்ரைன் மக்கள் பதுங்கியிருந்துள்ளனர்.
இந்த தகவலை உக்ரைன் செய்தி ஊடகம் ஒன்று தவறுதலாக வெளியிட்டுள்ளது. இவ்வாறு செய்தி வெளியாகி, அடுத்த 20 நிமிடங்களில் ரஷ்யா வான் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதில், நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அது மட்டுமின்றி, எச்சரிக்கை கருதி அந்த அரங்கத்திற்கு வெளியே சிறார்கள் என எழுதப்பட்டிருந்தும், ரஷ்ய விமானிகள் அதை பொருட்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.
குறித்த திரயரங்கமானது ரஷ்ய துருப்புகளால் கடுமையான தாக்குதலுக்கு இலக்கான மரியுபோல் நகரில் அமைந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் இன்று 23 ஆவது நாளாக தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் கடுமையாக நடந்து வருகிறது.
துறைமுக நகரமான மரியுபோலில் போர் தொடங்கிய நாளில் இருந்தே தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை உருக்குலைக்க ரஷ்யா தொடர்ந்து ஏவுகணை, குண்டுகளை வீசி வருகிறது.
