உக்ரைனுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா - ஒரே குடும்பத்தை சேர்ந்த 04 பேர் பலி
கடந்த சில நாட்களுக்கு மேலாக உக்ரைன் ரஷ்யப் போர் வலுப்பெற்ற நிலையில் உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்யா கொத்துக்குண்டுகள் மூலம் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள டொனேட்ஸ்க் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதியில் உக்ரைன் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.
குடியிருப்புகள் சேதம்

இந்த நிலையில், நேற்றைய தினம் (13) குறித்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நிகழ்த்தும் விதத்தில் உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்யா கொத்துக்குண்டுகள் மூலம் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலினால் அந்த பிரதேசத்திலுள்ள பல குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளன.
மேலும், குறித்த தாக்குதலில் பிறந்து 23 நாட்களே ஆன பெண் குழந்தை, குழந்தையின் 12 வயது நிரம்பிய சகோதரர் மற்றும் தந்தை, தாய் உட்பட 04 பேர் உயிரிழந்துள்ளனர்.