உக்ரைனின் அதிரடியில் பற்றியெரிந்த ரஷ்ய தொடருந்து
Russo-Ukrainian War
Ukraine
By Sumithiran
எரிபொருள் ஏற்றிச்சென்ற ரஷ்யாவுக்குச் சொந்தமான சரக்கு தொடருந்து மீது உக்ரைன் இன்று ( 19) தாக்குதல் நடத்தியதில் குறித்த தொடருந்து கவிழ்ந்து தீப்படித்து எரிந்துள்ளது.
தொடருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால், எரிபொருள் வீணாகியதாகவும், தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போரை முடிவிற்கு கொண்டுவரும் முயற்சியில் ட்ரம்ப்
போரை முடிவிற்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரமாக செயற்பட்டு வரும் நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து அந்த வழியாக ரஷ்யாவுக்கு தொடருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடருந்து போக்குவரத்தை நிறுத்தும் நோக்கத்தில் தாக்குதல்
ஜபோரோஜியா வழியாக இரு நாடுகளுக்கும் இடையிலான தொடருந்து போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்