ரஷ்ய அதிபா் தோ்தலின் இறுதி நாள்: சரமாரியாக தாக்குதல் நடத்திய உக்ரைன்
ரஷ்ய அதிபர் தேர்தலின் கடைசி நாளான நேற்றையதினமும் அந்நாடு மீது மிகப் பெரிய அளவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன்போது, கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை ரஷ்யாவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், வாக்குப் பதிவின் இறுதி நாளிலும் உக்ரைன், ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்ய பாதுகாப்புத் துறை
அதேவேளை, ரஷ்ய தலைநகரான மொஸ்கோவில் 4 ட்ரொன்கள் உட்பட மொத்தமாக 35 உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், உக்ரைன் எல்லையையொட்டி உள்ள ரஷ்யாவின் பெல்கொரோட், குா்ஸ்க், ரஸ்தோவ் மற்றும் தெற்கு கிராஸ்னடாா் பகுதிகளிலும் உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன என்று ரஷ்ய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
சிறுமி உயரிழப்பு
ஆனால் அந்த தாக்குதல்களினால் மொஸ்கோவில் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று அந்த நகர மேயா் சொ்கெய் சோபியானின் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நேற்றையதினம் பெல்கொரோட் நகரில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 16 வயது சிறுமி ஒருவர் உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |