ரஷ்யாவை கதறவிட்ட உக்ரைன் : ட்ரோன் தாக்குதலில் பலர்பலி
மத்திய ரஷ்யாவில் உள்ள டாடர்ஸ்டான் பிராந்தியத்தின் நிஸ்னேகாம்ஸ்க் நகரில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 13 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் மேலும் 75 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைனில் எல்லையில் இருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தொழில் நகரமான நிஸ்னேகாம்ஸ்க்கில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
எண்ணெய் வளங்களுக்கான மிகப்பெரிய பிராந்தியம்
ரஷ்யாவின் டாடர்ஸ்டான் எண்ணெய் வளங்களுக்கான மிகப்பெரிய பிராந்தியம் ஆகும். இங்கு ஏராளமான மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன.

ரஷ்யாவின் பதிலடி தாக்குதலுக்கான இந்த பகுதியை இலக்காக கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கிடையே உக்ரைன் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.கார்கீவ் பிராந்தியத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிராமத்தில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
456 உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா
இலங்கை நேரப்படி நேற்றிரவில் இருந்து இன்று காலைவரை 456 உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம தெரிவித்துள்ளது.

இதில் எத்தனை ட்ரோன்கள் இலக்குகளை அடைந்து சேதம் விளைவித்தது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. அதேவேளையில், ரஷ்யா 126ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
230 புலம்பெயர்ந்தவர்களுடன் ஆங்கில கால்வாயை கடந்து இங்கிலாந்து சென்ற சிறிய படகு : முறியடிக்கப்பட்ட சாதனை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |