ரஷ்யாவிற்கு பேரிழப்பு : உளவு விமானத்தை சுட்டுவீழ்த்தியது உக்ரைன்
ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக ரஷ்ய ஏ-50 இராணுவ உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் மற்றும் க்ராஸ்னோடார் நகரங்களுக்கு இடையே விமானம் அழிக்கப்பட்டதாக உக்ரைன் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
S-200 ஏவுகணையால் விமானம் வீழ்த்தப்பட்டதாக
சோவியத் விமான எதிர்ப்பு அமைப்பு S-200 ஏவுகணையால் விமானம் வீழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. S-200 விமான எதிர்ப்பு அமைப்புகளின் உற்பத்தி 60 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் யூனியனில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இந்த அமைப்பு பல முறை நவீனமயமாக்கப்பட்டது.
கனேவ்ஸ்கோய் மாவட்டத்தில் விமானத்தின் சிதைவுகளை அவசர சேவைகள் கண்டறிந்து, தீயை அணைத்ததாக கூறப்படுகிறது. இந்தக் கூற்று குறித்து ரஷ்யா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கி சனிக்கிழமை இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது.
உக்ரைன் விமானப்படை தலைவர் நன்றி தெரிவிப்பு
உக்ரைனின் விமானப்படையின் தலைவர் Mykola Oleshchuk தனது சேவை மற்றும் இராணுவ உளவுத்துறைக்கு விமானத்தை வீழ்த்த உதவியதற்காக நன்றி தெரிவித்தார்.
"தந்தையர் தினத்தின் பாதுகாவலர் தினத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்" என்று அவர் டெலிகிராமில் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்நிலையில் பகிரப்பட்ட காணொளியில், விமானம் வானில் சுடப்பட்டதாகத் தோன்றும் தருணத்தையும், விபத்துக்குப் பிறகு பெரிய தீப்பிழம்புகள் மற்றும் அடர்த்தியான, கருமையான புகை எழுவதையும் காட்டுகிறது.
உக்ரைன் கடைசியாக ஜனவரி 14 அன்று ஏ-50 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் தெரிவித்திருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |