ரஷ்ய படைகளுக்கு சிம்ம சொப்பனமாகும் உக்ரைன் ட்ரோன்கள்(காணொலி)
முக்கிய பங்கு வகிக்கும் ட்ரோன்கள்
உக்ரைன் மீது ஆக்கிரமிப்பை மேற்கொண்டுள்ள ரஷ்ய படைகளின் அழிவுகளுக்கு உக்ரைன் ட்ரோன்கள் மிக முக்கிய பங்கை வகித்து வருகின்றன.
உக்ரைனில் தாம் ஆக்கிரமித்துள்ள இடங்களில் பள்ளங்கள் தோண்டி அதற்குள் பதுங்கித் தாக்கும் செயல்முறையை தொடங்கியுள்ளர் ரஷ்யப் படைவீரர்கள்.
எனினும் , அவர்களின் மறைவிடங்களை தேடித்தேடி வேட்டையாடி வருகின்றன, உக்ரைன் ட்ரோன்கள். அப்படி பதுங்கியிருக்கும் ரஷ்யப் போர்வாகனங்களை, உக்ரைன் வீரர்கள் ட்ரோன்கள் மூலம் தேடி குண்டு வீசி தகர்க்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
Artillery units of the Ukrainian 28th Mechanized Brigade shells Russian dug-in positions at the southern front.#Russia #Ukraine pic.twitter.com/EaO5MXumMP
— BlueSauron?️ (@Blue_Sauron) June 9, 2022
துல்லியமான தகவல்
முதலில் ட்ரோன் ஒன்று எங்கெல்லாம் ரஷ்யப் போர்வாகனங்கள் உள்ளன என்பதைக் காட்ட, பின்னர் சரியாக அவற்றைத் தாக்கி அழிக்கிறார்கள் உக்ரைன் வீரர்கள்.

