ரஷ்யாவிற்கு பேரிடி..! ஒரேநாளில் தக்க பதிலடி கொடுத்த உக்ரைன்
அண்மையில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது உக்ரைன் திடீர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷ்யா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.
ரஷ்யாவுக்கு பதிலடி
மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.
இதற்கிடையே சமீபத்தில் ரஷ்யா ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலின்போது 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் ஏவப்பட்டன. இதில் பொதுமக்கள் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கீவ் உள்பட 6 நகரங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏவுகணை தாக்குதல்
இந்நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
ரஷ்யாவின் பெல்கரோட் நகரில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |