உக்ரைன் அதிபருக்கு கிடைத்த ஏமாற்றம் - மறுக்கப்பட்டது அனுமதி
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
Ukraine
By Sumithiran
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஒஸ்கர் விழாவில் தொடக்க உரை நிகழ்த்த கோரிக்கை விடுத்த நிலையில் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய இராணுவம் உக்ரைன் மீது போர்தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இப்பபோர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் போர் முடியாமல், உக்கிரமடைந்து வருகிறது.
ஒஸ்கார் விருது வழங்கும் விழா
இந்த நிலையில், சினிமாவில் உயரிய விருதாகக் கருதப்படும் ஒஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்க நாட்டின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில், பல சினிமா கலைஞர்களும், இசைக் கலைஞர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த விழாவின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடக்க உரை நிகழ்த்த கோரிக்கை விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்தாக தகவல் வெளியாகியுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்