ரஷ்யாவை நிறுத்தத் தவறினால் உலகம் அழியும்...! ஜெலென்ஸ்கி ஆவேசம்
ரஷ்யாவுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராக உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு உரையை ஆற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராக உள்ளது. மீதமுள்ள பத்து சதவீதம்தான் உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் விதியைத் தீா்மானிக்கும்.
உக்ரைனில் அமைதி
உக்ரைனில் அமைதியை கொண்டு வருவதற்காக எந்த விலையும் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. நாங்கள் போரின் முடிவை விரும்புகின்றோம், உக்ரைனின் முடிவை அல்ல” என அவர் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும், டான்பாஸ் பகுதியில் இருந்து உக்ரைன் படைகள் வெளியேறினால் அது உக்ரைனுக்கே முடிவுகட்டிவிடும்.

டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிரதேசங்கள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தி வருகின்றது.
தற்போது ரஷ்யா டொனட்ஸ்கின் 75 சதவீதத்தையும் மற்றும் லுஹான்ஸ்கின் 99 சதவீதத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
எஞ்சியுள்ள பகுதி
எஞ்சியுள்ள பகுதிகளையும் உக்ரைன் விட்டுத் தர வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்துவது தான் போா் நிறுத்த பேச்சுவாா்த்தைகளில் மிகக் கடினமான பிரச்சினையாக உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் ஃப்ளோரிடாவில் நடந்த சந்திப்புக்குப் பிறகு, அமெரிக்கா 15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கின்றது என ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.

இருப்பினும், அதன் நடைமுறைப்படுத்தல் குறித்து இன்னும் தெளிவாகவில்லை.
இந்தநிலையில், பலவீனமான ஒப்பந்தங்களளில் கையொப்பமிடுவது போரை மீண்டும் தூண்டும் என்று ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
உலகம் ரஷ்யாவின் போரை நிறுத்த வேண்டும் இல்லையெனில் ரஷ்யா உலகை தனது போருக்கு இழுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 13 மணி நேரம் முன்