தையிட்டி போராட்ட விவகாரம்! வேலன் சுவாமிகளுக்கு காவல்துறை விடுத்த அழைப்பு
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Independent Writer
கடந்த பௌர்ணமி தினத்தன்று நடைபெற்ற சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்கு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 5ஆம் திகதி காலை 9 மணிக்கு பலாலி காவல் நிலையத்திற்கு, வருமாறு அழைப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரையானது மக்களது காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விவகாரத்தில், அந்த விகாரையை அகற்றுமாறு கோரி இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் விசாரிக்க இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 14 மணி நேரம் முன்
மலையக மக்களின் வருகை வடக்கு - கிழக்கிற்கு சாதகமா.. பாதகமா..
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்