நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டிருந்த ஊடகவியலாளரின் பின்னால் வெடித்து சிதறிய ஏவுகணை - பதற வைக்கும் காட்சி!
உக்ரைனில், ரஷ்யா மேற்கொண்டுள்ள போர் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் நேரலையில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த போது, உக்ரைன் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நேரலையில், ஊடகவியலாளர் உரையாடலை மேற்கொள்டிருக்கம் போது, அவரின் பின்னால் ரஷ்யாவின் ஏவுகணை ஒன்று வீழ்ந்து வெடித்து நெருப்பு சுவாலை ஒன்று மேலெழுவதையும், அதிலிருந்து அவர் தப்புவதையும் காட்டும் காணொளி ஒன்று வெளியாகி அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
நேரலையில் வெடித்த ஏவுகணை
பிரான்ஸ் ஊடகவியலாளரான Paul Gasnier என்பவர் உக்ரைனிலிருந்து நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, திடீரென அவரது தலைக்குப் பின்னால் ஏவுகணை ஒன்று விழுந்து வெடிப்பதை காணொளியில் நேரடியாக காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறு ஏவுகணை வீழ்ந்து வெடிக்கும் போது, சட்டென Paul தலைகுனிந்தபடி அங்கிருந்து ஓட, தொலைக்காட்சி நிலையத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவர் அதிர்ச்சியடைகிறார்.
உடகவியலாளரின் நிலை என்ன?
இந்தக் காட்சியைக் கண்டவர்கள் Paulஇன் நிலைமை என்ன ஆனதோ என அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், அவருக்கு எதுவும் ஆகவில்லை என பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Oh God, the moment of russian strike on #Kramatorsk this night was captured live on the French TV. I hope the colleagues are ok. pic.twitter.com/CG8eqbmuVF
— Anastasia Magazova ? (@a_magazova) January 2, 2023
இந்த சம்பவம் Donetsk மாகாணத்திலுள்ள Druzhkivka நகரில் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் Paul தப்பினாலும், இதற்கு முன், சென்ற ஆண்டு இதேபோல செய்தி சேகரித்துக்கொண்டிருந்த Leclerc-Imhoff என்னும் பிரான்ஸ் ஊடகவியலாளர் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்ததும், அந்த தகவலை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ட்விட்டரில் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
