உக்ரைனிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட இந்திய மாணவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு!
உக்ரைன் மீது ரஷ்யா 9 ஆவது நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனின் கீவ் நகரிலிருந்து இந்திய மாணவர் ஒருவர் தப்பிச் செல்ல முயன்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் கேரள மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட சில நாட்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காயமடைந்த மாணவர் நகர மையத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து மேலும் 1,700 இந்திய மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் வி.கே சிங் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கீவ் தலைநகரில் உள்ள இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
