இலக்குகளை அடையும் வரை யுத்தம் தொடரும்- அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ரஷ்யா!
உக்ரைனில் முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கை தமது இலக்குகளை அடையும் வரை தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்
மேற்கு நாடுகளால் உருவாக்கப்பட்ட அச்சுறுத்தல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே மாஸ்கோவின் முக்கிய குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாறாக ரஷ்யா உக்ரைனின் பிரதேசத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றும் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்ததில் இருந்து 660,000 க்கும் அதிகமான மக்கள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர் என்று ஐ.நா அகதிகள் நிறுவனம் (UNHCR) தெரிவித்துள்ளது.
அதேவேளை போலந்திற்குள் நுழைய 60 மணிநேரம் வரை மக்கள் காத்திருப்பதாகவும், ரோமானிய எல்லையில் 20 கிமீ (12 மைல்கள்) வரை வரிசைகள் இருப்பதாகவும் UNHCR செய்தித் தொடர்பாளர் ஷாபியா மாண்டூ கூறினார்.
