உக்ரைன்-ரஷ்யா போர் : கொல்லப்பட்ட இலங்கையர்கள்!
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான போரில், இதுவரை ஐந்து இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மூவர் உயிரிழந்திருந்த நிலையில், ரஷ்யா மீதான உக்ரைனின் வான்வழித் தாக்குதலில் மேலும் இரண்டு இலங்கையர்கள் தற்போது உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவுக்காக போரிடும் இலங்கையர்கள்
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான போரில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது இரண்டு நாடுகளினதும் இராணுவத்தில் உள்ள இலங்கையர்களின் நிலை தொடர்பில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதற்கமைய, இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிக சம்பளத்தை எதிர்ப்பாத்து பல இலங்கையர்கள் ரஷ்யா இராணுவத்தில் இணைந்துள்ளனர்.
இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற மற்றும் இராணுவத்தில் இருந்து பதவி விலகிய நூற்றுக்கணக்கான வீரர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயிரிழந்த இலங்கையர்கள்
இந்த நிலையில், இரண்டு நாடுகளுக்கிடையிலான போரில் கடந்த ஆண்டு மூன்று இலங்கையர்கள் உயிரிழந்திருந்த பின்னணியில், தற்போது மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், ரஷ்யா மீதான உக்ரைனின் தாக்குதலில் மற்றுமொரு இலங்கையர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Sri Lankan mercenaries fighting against Ukerain in the Russian army. pic.twitter.com/6rraMNMxlq
— Kamal Perera (@KamalPe69257601) March 28, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |