உக்ரைன் படையினரால் கொன்று குவிக்கப்பட்ட வாக்னர் படையினர் - ஜெலென்ஸ்கி வெளியிட்ட தகவல்
ரஷ்யாவின் தனியார் இராணுவ படை என கூறப்படும் வாடகைப்படை குழுவான வாக்னர் குழுவினர் பெரும் இழப்பை சந்தித்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கிழக்கு உக்ரைனில் மட்டும், எங்கள் படைகள் 21,000 வாக்னர் வீரர்களைக் கொன்று குவித்தன' என்று சுட்டிக்காட்டினார்.
அதுமட்டுமின்றி, 80,000 வாக்னர் படையினர் போரில் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் கூறினார்.
மார் தட்டும் ஜெலென்ஸ்கி

ஜெலென்ஸ்கி தனது கூற்றுக்கு எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.
ஸ்பெயின் பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸின் கீவ் விஜயத்தை ஒட்டி ஸ்பானிய ஊடகங்களுடனான செய்தியாளர் சந்திப்பின் போது ஜெலென்ஸ்கி இதனை தெரிவித்தார்.
மேலும் பேசிய ஜெலென்ஸ்கி, "ரஷ்யாவில் மட்டுமே என்னைக் கொல்ல விரும்புகிறார்கள், ஆனால் முழு உலகமும் புடினை கொல்ல விரும்புகிறது. இது புடினுக்கு மிகவும் ஆபத்தானது" என்று தெரிவித்தார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 9 மணி நேரம் முன்