சீர்குலைந்த ரஷ்ய இராணுவம்..!
ரஷ்யாவின் இராணுவம் சீர்குலைந்த நிலையில் இருப்பதாக அமெரிக்க உயர்மட்ட இராணுவ ஜெனரல் மார்க் மில்லி கூறியுள்ளார்.
பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் பேசுகையில், மேற்கண்டவாறு கூறிய அவர், சீரற்ற தலைமைத்துவம் மற்றும் மிகக்குறைந்த மன உறுதியுடன் துருப்புக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
33 நாடுகளில் பயிற்சி
இதன்போது மேலும் பேசிய அவர், சர்வதேச முயற்சிகள் மூலம் கிட்டத்தட்ட 60 ஆயிரம் உக்ரைனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் களமுனையில் போரில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போது 6,000 இற்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் 40 வெவ்வேறு இடங்களில் பயிற்சி பெறுகிறார்கள் - மூன்று கண்டங்களில் உள்ள 33 நாடுகளில் இடம்பெறுகின்றன.
இதுவரை 11,000 உக்ரைன் வீரர்களுக்கு அமெரிக்கா பயிற்சி அளித்துள்ளது” - என்றார்.
கடினமான சண்டை
அத்தோடு, உக்ரைனின் புதிய எதிர்த் தாக்குதலை மார்க் மில்லி பாராட்டியுள்ளார்.
அதே நேரத்தில் "மிகக் கடினமான சண்டை" வரவுள்ளதாவும் அவர் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் களமுனையில் தீவிர மோதல் இடம்பெற்றுவரும் நிலையில், களமுனை நிலவரம் குறித்த படங்கள் சில வெளிவந்திருக்கிறன.
களமுனை படங்கள்
