உக்ரைனில் ரஷ்யா புதிய அலை ஏவுகணைத் தாக்குதல்
உக்ரைன் மீதான படை நடவடிக்கை ஆரம்பித்த பின்னர், கீயேவ் பிராந்தியம் மீது பாரிய ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய பேச்சு நடத்தியுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின், மூலோபாயக் கூட்டாண்மை மற்றும் உக்ரைன் யுத்தம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
ஏவுகணை தாக்குதல்கள்

உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பை இலக்குவைத்து நேற்று ஒன்பதாவது அலையாக 70 இற்கும் அதிகமான ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டுள்ள நிலையில், மின் விநியோகத்தை உடனடியாக வழமைக்கு கொண்டுவர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனினும் வைத்தியசாலை, நீர்விநியோக வசதிகள், வெப்பமூட்டும் வசதிகள் மற்றும் கழிவற்றல் திட்டங்களுக்கான மின்விநியோகத்தை வழங்க முன்னுரிமை அளிப்பதாக அந்த நாட்டு மின் விநியோக நிறுவனம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும் கீயேவ் பிராந்தியம் மீதான ரஷ்யாவின் 40 ஏவுகணைகளில் 37 ஐ வான் பாதுகாப்பு கட்டமைப்பினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைனின் தலைநகர இராணுவ நிர்வாகம் கூறியுள்ளது.