உக்ரைன் ரஷ்ய அடுத்த கட்ட பேச்சுவார்த்தை!
Turkey
russia
ukraine
war
negotiation
By Thavathevan
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான அடுத்த சுற்று பேச்சு வார்த்தை இடம்பெறவுள்ளது.
அதன்படி, துருக்கியில் இன்று தொடங்கி நாளை மறுதினம் (30) இந்தப் பேச்சு வார்த்தை நிறைவடைய இருக்கிறது.
இந்த தகவலை உக்ரைன் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்ற டேவிட் அராகாமியா பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுவரை நடந்துள்ள பேச்சு வார்த்தைகள் மிகவும் கடினமானவை என உக்ரைன் விமர்சித்தது. இந்நிலையில் இன்று துருக்கியில் தொடங்குகிற பேச்சுவார்த்தையிலாவது திருப்பம் வருமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறபோதும், மற்றொரு புறம் சமரச பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி