ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனில் உயிரிழக்கும் வீதம் அதிகரிப்பு - வெளியிடப்பட்டுள்ள அறிக்கை!
Russo-Ukrainian War
Ukraine
Russian Federation
Death
By Pakirathan
மேலதிகமான துருப்புக்களை இறக்கி உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில், உக்ரைனும் அதற்கு பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
கடந்த வாரங்களை விட நடப்பு வாரத்தில் உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களின் இறப்பு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த விடயம் உக்ரைன் தேசிய பாதுகாப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
நாளொன்றுக்கு உயிரிழக்கும் ரஷ்ய வீரர்கள்

அந்தவகையில், வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையின் படி, 824 ரஷ்ய வீரர்கள் நாளாந்தம் உக்ரைனில் உயிரிழக்கின்றனர்.
அதேசமயம், உக்ரைன் படையினர் ரஷ்யாவின் தாக்குதல்களை வலுவாக எதிர்கொண்டு பதில் தாக்குதல்களை நடத்தி வருவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உக்ரைன் - ரஷ்ய போர் ஆரம்பித்த நேரம் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 1000 ரஷ்ய துருப்புக்கள் இறந்தமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி