உக்ரைனுக்கு வழங்கப்படும் போர் விமானங்களை அழிப்போம் - ரஷ்யா எச்சரிக்கை!
உக்ரேனுக்கு நேட்டோவும் ஏனைய நாடுகளும் வழங்கும் போர்விமானங்கள் அழிக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
அண்மையில் உக்ரேனுக்கு உதவ 25 MIG-29-ரகப் போர் விமானங்களை வழங்கப்போவதாக போலந்து மற்றும் ஸ்லோவேக்கியா அறிவித்துள்ளன.
இந்தநிலையில், ரஷ்யா குறித்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
ரஷ்யாவின் எச்சரிக்கை
நேட்டோ உக்ரேனுக்கு ஆயுதம் வழங்கினால் அது ரஷ்யப் படையின் தாக்குதலுக்கு இலக்காகும் என கிரேம்ளின் முன்பே எச்சரித்திருக்கின்றது.
போர் விமானங்கள் வேண்டும் என உக்ரைன் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போர் பதற்றம் மேலும் அதிகரிக்கும் எனும் அச்சத்தில் உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க அமெரிக்கா மறுத்து வருகின்றது.
அதேசமயம், அமெரிக்காவின் ஆள் இல்லா விமானத்தைக் கருங்கடலில் சுட்டுத்தள்ளிய விமானியை ரஷ்யா கெளரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
