புடினுக்கு எதிரான வலுவான ஆதாரங்களைத் திரட்டும் பிரித்தானியா!
russia
evidence
ukraine
war
united kingdom
By Kalaimathy
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு போர் குற்றவாளி என்பதற்கு மிகவும் வலுவான ஆதாரம் இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் விளாடிமிர் புடின் ஒரு போர் குற்றவாளி என கூறியிருந்த நிலையில், தற்போது அதே கருத்தினை பிரித்தானிய வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸூம் முன்வைத்துள்ளார்.
‘போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கும், விளாடிமிர் புடின் அவர்களுக்குப் பின்னால் இருந்ததற்கும் மிக மிக வலுவான ஆதாரங்கள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றங்களுக்கு விளாடிமிர் புடின் பொறுப்புக் கூறுவதை உறுதி செய்வதற்காக, பிரித்தானியா அந்த ஆதாரங்களை சேகரித்து வருகிறது’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி