உக்ரைன் - ரஷ்ய போரின் எதிரொலி! ஜெனிவாவில் தள்ளிப்போகும் சிறிலங்கா விவகாரம்
Russia
Human Rights
SriLanka
Un
Kukarin
Ukraune Russia War
By Chanakyan
உக்ரைன் - ரஷ்ய விவகாரம் காரணமாக சிறிலங்கா தொடர்பான மனித உரிமை மீறல்கள் விவகாரம் தள்ளிவைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஏப்ரல் 1ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் சிறிலங்கா தொடர்பிலான மனித உரிமை விவகாரம் எதிர்வரும் 3ஆம் திகதி ஆணையாளரினால் சமர்பிக்கப்படவிருந்தது.
உக்ரைன் - ரஷ்ய மோதல் விவகாரம் தொடர்பில் பேசப்படவுள்ளமை காரணமாக சிறிலங்கா தொடர்பில் சமர்பிக்கப்படவிருந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் 7ஆம் திகதி அல்லது 8ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உக்ரைன் - ரஷ்ய மோதல் 6ஆம் நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. நேற்றைய தினம் பெலாரஸ் இடம்பெற்ற பேச்சுவார்த்தை எந்தவிதமான முடிவும் எடுக்கப்பட்டாத நிலையில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
