பேச்சுக்கு உடன்படவில்லை என்றால் ...ரஷ்யாவுக்கு உக்ரைன் அதிபர் கடும் எச்சரிக்கை
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா உடன்படவில்லை என்றால் ரஷ்ய நாட்டில் உக்ரைன் ஏற்படுத்தும் தாக்குதலில் இருந்து மீள இன்னும் பல தலைமுறைகள் ஆகும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் மேலும் தெரிவித்தவை வருமாறு,
நான் கூறுவதை இப்போது அனைவரும் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பாக மொஸ்கோவில் (ரஷ்ய அதிபர்) நான் சொல்வதைக் கேட்க வேண்டும்.
இது சந்திப்பதற்கான நேரம். பேசுவதற்கான நேரம். உக்ரைனுக்கான பிராந்திய ஒருமைப்பாடு, நீதியை மீட்டெடுப்பதற்கான தருணம். இல்லையென்றால் ரஷ்யா இத்தகைய இழப்புகளை தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டும்.
அது மீண்டெழுவதற்கு பல தலைமுறைகள் போதாது. அமைதி பற்றிய பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டும். எங்களுக்கான பாதுகாப்பை, உக்ரைனுக்கான அர்த்தமுள்ள, நியாயமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
தாமதம் இன்றி ரஷ்யா தனது சொந்த தவறுகளில் இருந்து சேதத்தை குறைக்க பேச்சுவார்த்தை தான் வாய்ப்பு.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
