அதிகரித்துள்ள போர்ப்பதற்றம் - வெளியான நகைச்சுவையான பதிவு (படம்)
உக்ரைன் மீது போர் தொடுத்து அதனை கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் அதேவேளை ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பாக உக்ரைனின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம், ட்விட் மூலம் கேலி செய்துள்ளது.
ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக நிலப்பரப்பில் ஐரோப்பாவின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக உக்ரைன் உள்ளது. சோவியத் ஒன்றியம் துண்டானபோது பிரிந்த நாடுகளில் உக்ரைனும் ஒன்று ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனுடன் ரஷ்யாவுக்கு நிலப்பரப்பு தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது.
உக்ரைனின் ஒருபகுதியான கிரிமியாவை கடந்த 2014ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷ்யா தனது ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்தது. இதோடு இல்லாமல் முழு உக்ரைனையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷ்யா முயன்று வருகிறது. இதற்காக உக்ரைன் எல்லையிலும் படைகளை குவித்து வருகிறது.
தாக்குதல் நடத்தி உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்ய முயன்றால் பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. ரஷ்ய அதிபர் புடினுடன் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் உடனான மோதல் போக்கை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்தும்படியும் கூறியிருந்தார்.
ரஷ்யா எந்நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற சூழல் உள்ளபோதும், இந்த அசாதாரண சூழல் குறித்து நகைச்சுவையான பதிவு ஒன்றைய உக்ரைன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது. அதில், ரஷ்யாவுக்கு அருகில் வசிப்பது என்பது ஏனைய தலைவலிகளை விட கடுமையானது என்ற தொனியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
— Ukraine / Україна (@Ukraine) December 7, 2021