ரஷ்ய தாக்குதல் உலங்குவானூர்திகளை சுட்டுவீழ்த்திய உக்ரைன் இராணுவம்(காணொலி)
russia
army
ukraine
helicopters
shotdown
By Sumithiran
உக்ரைனில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ரஷ்யாவின் இரண்டு தாக்குதல் உலங்கு வானூர்திகளை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆறாவது நாளான இன்றையதினமும் ரஷ்யா மோசமான தாக்குதல்களை உக்ரைன் மீது நடத்தி வருகிறது.தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய இராணுவம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனில் தாக்குதல் நடத்தும் ரஷ்ய உலங்கு வானூர்திகளில் இரண்டை தாம் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ள உக்ரைன் இராணுவம், அது தொடர்பான காணொலியையும் வெளியிட்டுள்ளது.
Two #Russian helicopters will no longer take to the air. pic.twitter.com/ohggPrQqGG
— NEXTA (@nexta_tv) March 1, 2022
