பாம்பு தீவில் மீண்டும் உயரப்பறக்கும் உக்ரைனிய கொடி(வீடியோ)
Russo-Ukrainian War
Ukraine
By Sumithiran
கடந்த வாரம் ரஷ்ய படைகள் பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் கருங்கடலில் உள்ள பாம்பு தீவில் மீண்டும் உக்ரைனியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
குறித்த தகவலை உக்ரைனிய இராணுவ தரப்பும் உறுதி செய்துள்ளதுடன், மிக விரைவில் பாம்பு தீவில் இராணுவ பலத்தை அதிகரிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
உக்ரைனியக் கொடி பறக்கவிடப்பட்டது குறித்த புகைப்படத்தையும் அரச தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, பாம்பு தீவில் இருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறியுள்ளதால், உக்ரேனிய துறைமுகங்களில் நீடித்து வந்த ரஷ்ய துருப்புகளின் முற்றுகை விலகும் என்றே நம்பப்படுகிறது.
ஆனால், உக்ரைனிய தானியங்களை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு இது தற்போதைய சூழலில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
