உக்ரைன் படைகள் அதிரடி -200ற்கும் மேல் ரஷ்ய படையினர் கொன்று குவிப்பு (படம்)
உக்ரைன் படைகள் நடத்திய அதிரடி
உக்ரைன் படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 200 ரஷ்ய வீரர்கள் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் கிழக்கு பகுதியில் தற்போது கவனம் செலுத்தி வரும் ரஷ்ய படைகள், டான்பாஸ் பகுதியில் உள்ள பெரும்பாலான ரஷ்ய ஆதரவாளர்களின் பகுதிகளை உக்ரைனிய படைகளிடம் இருந்து கைப்பற்றியுள்ளன.
இந்த நிலையில், ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் மெலிடோபோல் நகரில் உள்ள ரஷ்ய இராணுவ தளத்தில் உக்ரைனிய படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளன.
⚡️The Armed Forces of Ukraine hit a Russian military facility in occupied Melitopol
— NEXTA (@nexta_tv) July 5, 2022
According to preliminary data, 200 invaders were killed, another three hundred were injured. #Melitopol collaborators are frightened and afraid to go to work.
?Mayor of Melitopol Ivan Fedorov pic.twitter.com/YFECXhXf9Q
200 ரஷ்ய வீரர்கள் பலி
இது தொடர்பாக வெளிவந்துள்ள முதல்நிலை அறிக்கைகளின் அடிப்படையில், உக்ரைன் படைகள் நடத்திய இந்த தாக்குதலில் சுமார் 200 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 300 பேர் வரை படுகாயம் அடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, உக்ரைனிய படைகளின் தாக்குதலை கருத்தில் கொண்டு Melitopol-லில் உள்ள ரஷ்ய கூட்டுப்பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை தொடர பயப்படுகிறார்கள் என அந்த பகுதியின் மேயர் Ivan Fedorov தெரிவித்துள்ளார்.
