ரஷ்ய கப்பலை தகர்த்து அழித்தது உக்ரைன் படை -வெளியானது வீடியோ
உக்ரைன் மீதான தாக்குதலை நடத்திவரும் ரஷ்ய படைகள் நாளாந்தம் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக முன்னணி படைத்தளபதிகள் பலரை ரஷ்யா இதுவரை இழந்துள்ளது.அதுபோல படை இழப்பு,ஆயுத இழப்பு என்பனவும் ரஷ்யாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் தாக்குதலை நிறுத்தும் முயற்சியில் ரஷ்யா முனைப்பு காட்டவில்லை. இந்த நிலையில் ரஷ்யாவின் போர்க்கப்பல் ஒன்று உக்ரைன் படைகளால் அழிக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை உக்ரைனின் ஒடேசா நகருக்கு அருகிலுள்ள கடற்கரைப்பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளியான வீடியோவில் கடற்பகுதியில் வீசப்படும் குண்டுகளால் ரஷ்ய கப்பல் வெடித்துச் சிதறுவது காட்டப்படுகிறது.
இதேவேளை ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் துணைத்தளபதி உக்ரைன் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Odessa#Ukraine?? pic.twitter.com/OLDCECIGS0
— Aleph א ?? (@no_itsmyturn) March 21, 2022
