அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அநுரவுடன் பேச்சு - கஜேந்திரகுமாரிடம் ஐநா பிரதிநிதி உறுதிமொழி

United Nations Tamils Anura Kumara Dissanayaka Gajendrakumar Ponnambalam
By Thulsi Dec 06, 2024 02:06 AM GMT
Report

அரசியல் கைதிகள் 10 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் (Anura Kumara Dissanayake) பேசுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ் (Mark Andrew French) உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு (Gajendrakumar Ponnambalam) ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ்சுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (05) கொழும்பில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது நாட்டின் சமகால நிலவரம், புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாட்டை தொடர்ந்து முன் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் கொண்டிருக்கும் இயலுமை உள்ளிட்ட விடயங்கள் பற்றி வதிவிடப் பிரதிநிதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேட்டறிந்தார்.

2009 இறுதி யுத்தத்தின் முக்கிய காணொளி : விடுக்கப்பட்டுள்ள பகீரங்க சவால்

2009 இறுதி யுத்தத்தின் முக்கிய காணொளி : விடுக்கப்பட்டுள்ள பகீரங்க சவால்

முக்கிய வாக்குறுதி

அதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார்  இப்புதிய அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் ஊழல் மோசடிகள் குறையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்தார்.  

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அநுரவுடன் பேச்சு - கஜேந்திரகுமாரிடம் ஐநா பிரதிநிதி உறுதிமொழி | Un Assures Release Of Political Prisoners

இருப்பினும் 'தற்போது இந்த அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்கப் பெற்றிருக்கும் நிலையில், ஏற்கனவே நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு முரணாக நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்காமல் தொடர்வதையே அல்லது பொருளாதார சுமையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையோ நியாயப்படுத்த முடியாது.

எனவே அடுத்துவரும் ஒரு வருட காலத்துக்குள் இவ்விரண்டு முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு இருக்கிறது எனவும் அவர் ஐ.நா வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரெஞ்சிடம் சுட்டிக்காட்டினார்.  

யாழ்ப்பாணத்தில் 4 வயதுச் சிறுவனுக்கு எமனான சவர்க்காரம்

யாழ்ப்பாணத்தில் 4 வயதுச் சிறுவனுக்கு எமனான சவர்க்காரம்

தமிழர்களின் இனப்பிரச்னை

அதேபோன்று இப்போது தமிழரசுககட்சி சார்பில் 8 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஒரு உறுப்பினரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பில் ஒரு உறுப்பினரும் என தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 10 உறுப்பினர்களும் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்படவேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார். 

அதனை முன்னிறுத்தி அவரால் முன்னெடுக்கப்பட்டுவரும் நகர்வுகள் பற்றியும் மார்க் அன்ட்ரூ பிரெஞ்சுக்கு விளக்கமளித்தார்.  

மேலும் நீண்டகாலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் 10 பேர் தொடர்பில் பேசப்பட்டபோது அவர்களது விடுதலை குறித்து தானும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் பேசுவதாக ஐ.நா. வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ் கஜேந்திரகுமாரிடம் வாக்குறுதியளித்தார்.

வேலை தருவதாக சமூக வலைத்தளங்களில் பண மோசடி : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

வேலை தருவதாக சமூக வலைத்தளங்களில் பண மோசடி : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

    

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
மரண அறிவித்தல்

மூதூர், காந்திநகர்

15 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்