ஹமாஸ் தாக்குதலின் பின்னணியில் ஐ.நா பணியாளர்கள் : இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினால் நடத்தப்பட்ட தாக்குதலுடன் ஐ.நா பணியாளர்களுக்கு தொடர்பிருப்பதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதன்போது, எத்தனை பேர் வரை தாக்குதலின் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
இருப்பினும், அமெரிக்கா மற்றும் ஐ.நா. பணியாளர்கள் உள்பட 12 பணியாளர்களின் விவரங்களை இஸ்ரேல் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
09 பேர் பணிநீக்கம்
இந்நிலையில், இஸ்ரேல் அடையாளம் காட்டியதில் 12 பணியாளர்களில் 09 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. பொது செயலாளர் ஆன்டானியோ கட்டிரெஸ் அறிவித்துள்ளார்.
அத்தோடு, எஞ்சியிருக்கும் மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய நபர்கள் இருவரும் யார் என்பது இது வரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி உதவி நிறுத்தம்
அதேவேளை, இந்த கடுமையான குற்றச்சாட்டுகளின் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் ஐ.நா. பொது செயலாளர் உறுதியளித்துள்ளார்.
ஐ.நாவின் மீதான இந்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து அமெரிக்கா உட்பட ஒன்பது நாடுகள் காசாவுக்கு வழங்கி வந்த நிதியுதவியை தற்காலிக அடிப்படையில் நிறுத்தி வைத்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |