இஸ்ரேல் போர் தொடர்பில் உலக நாடுகளின் நிலைப்பாடு: ஐநா கடும் கண்டனம்
ஹமாஸுக்கு ஆதரவளிப்பதாகக் கூறி, காசா பகுதிக்கான உதவிகளை நிறுத்தும் பல நாடுகளின் முடிவு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உரிய தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அந்த நாடுகளிடம் கோரிக்கை விடுப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
உதவிப்பொருட்கள்
பல்வேறு நாடுகளின் உதவியுடன் காசா பகுதியின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை நிவாரணம் வழங்கியிருந்தது.
எவ்வாறாயினும், ஹமாஸ் அமைப்பின் செயற்பாடுகளுக்கு அந்த அமைப்பு ஆதரவளிப்பதாக எழுந்த குற்றச்சாட்டினால் பிரித்தானியா உள்ளிட்ட 09 நாடுகள் தமது உதவிப் பொருட்களை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.
மொத்த உயிரிழப்புகள்
அத்தோடு, இஸ்ரேல் ஹமாஸ் போர் ஆரம்பித்து 110 நாட்களையும் கடந்துள்ள நிலையில், 26 ஆயிரத்து 400 இற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 64ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |