செங்கடலில் வெற்றிகரமாக சுட்டுவீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானம் : பிரிட்டன் அறிவிப்பு
ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் செங்கடல் பகுதிக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை ‘வெற்றிகரமாக’ சுட்டு வீழ்த்தியதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எச்எம்எஸ் டயமண்ட் என்ற போர்க்கப்பலை தாக்க முயன்ற ஹவுதி ஆளில்லா விமானத்தையே சுட்டு வீழ்த்தியதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எவ்வித இழப்பும் ஏற்படவில்லை
இந்த தாக்குதலால் தமது தரப்பில் எவ்வித இழப்பும் ஏற்படவில்லை என பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Yesterday the crew of @HMSDiamond had to once again shoot down a Houthi attack drone illegally targeting the ship.
— Ministry of Defence 🇬🇧 (@DefenceHQ) January 28, 2024
Read the full statement below: pic.twitter.com/tOmyyrYiNO
அத்துடன் இந்த சட்டவிரோதமான தாக்குதலை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் செங்கடலை பாதுகாப்பது தமது கடமை எனவும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக
காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக நவம்பர் 19 முதல் ஏமனின் ஹவுதி குழு ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை செங்கடலில்செல்லும் கப்பல்களை தாக்க பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |