ஹமாஸிற்கு கோரிக்கை விடுத்த ஐ.நா
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையில் தொடர்ந்து 10வது நாளாக போர் இடம்பெற்றுவரும் வேளையில் மோதல் சூழ்நிலைகளை குறைப்பதற்காக எந்த நிபந்தனையுமின்றி இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு ஐ.நா கோரிக்கை விடுவித்துள்ளது.
இந்நிலையில், ஐ.நா தலைவர் அண்டோனியோ குத்ரேஸ் இரண்டு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
ஐ.நா தலைவர் அண்டோனியோ குத்ரேஸ் கூறுகையில், "ஹமாஸ் அமைப்பினர் எந்த வித நிபந்தனையுமின்றி பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அதேபோல் இஸ்ரேல் மனிதாபிமான உதவிகள் காசா சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும், மத்திய கிழக்கில் நிலவும் அபாயமான சூழலில் ஐ.நா தலைவராக நான் இந்த இரண்டு கோரிக்கைகளையும் முன்வைக்க வேண்டிய கடமை உள்ளது. அதன்படி கோருகிறேன்" என்றார்.
காசாவின் சூழ்நிலை
மேலும், இஸ்ரேலின் தொடர் அறிவுறுத்தலால் காசாவின் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பல லட்சம் பேர் இடம் பெயர்ந்துவிட்டனர்.
அதேவேளை, மருத்துவமனைகளில் கூட எரிபொருள் இல்லாத சூழலலே காசாவில் நிலவுகிறது. இன்னும் 24 மணி நேரத்தில் மருத்துவமனைகள் கூட இருளில் மூழ்கும். ஆயிரக்கணக்கான நோயாளிகள் உரிய சிகிச்சை கிட்டாமல் உயிரிழக்க நேரிடும் என ஐ.நா மனிதாபிமான உதவிகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.