உலக அமைதிக்கு ஆபத்தானவர் ஐ.நா பொதுச்செயலர் : இஸ்ரேல் சீற்றம்
ஐ.நா பொது செயலர் அன்டோனியா குட்டரெஸின் பதவிக்காலம் உலக அமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
காசாவில் இடம்பெறும் மனித பேரழிவுகளை தடுத்து நிறுத்த உடனடி யுத்த நிறுத்தம் அவசியம் என ஐ.நா பொதுச் செயலர் உலக நாடுகளை வலியுறுத்தியிருந்த நிலையிலேயே இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பாதுகாப்பு அவை உறுப்பினர்களுக்கு ஐ.நா செயலர் எச்சரிக்கை
முன்னதாக குட்டரெஸ் ஐநாவின் பாதுகாப்பு அவை உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தனது பிரிவு 99-ஐ பயன்படுத்தி உறுப்பு நாடுகளை எச்சரித்திருந்தார்.

பிரிவு-99 என்பது ஐநாவின் பொது செயலர், உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் என அவர் கருதுகிற விவகாரத்தைக் குறிப்பிட பயன்படுத்தும் சாசன உரிமையாகும்.
அக்கடிதத்தில் “சர்வதேச அமைப்பு, மொத்த ஆற்றலையும் உபயோகித்து போரைத் தடுக்க வேண்டியதும் இந்த நெருக்கடி நிலைக்கு முடிவுகட்ட வேண்டியதும் அதன் பொறுப்பாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் சீற்றம்
குட்டரெஸின் இந்த நடவடிக்கை ஹமாஸை ஆதரிப்பதற்கும் அவர்களின் கொடூரமான தாக்குதலை (ஒக்.7) அங்கீகரிப்பதற்கும் சமம் என இஸ்ரேல் வெளியுறவு துறை அமைச்சர் எலி கோஹன் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரிவு 99-ஐ அவர் செயற்படச் செய்தது மற்றும் போர் நிறுத்தத்துக்கான அழைப்பு ஆகியவை ஹமாஸ பயங்கரவாத அமைப்பிற்கான ஆதரவைக் காட்டுகிறது.
முதியவர்களை கொலை செய்தது, குழந்தைகளைக் கடத்தி சென்றது மற்றும் பெண்கள் மீது பாலியல் வன்முறை செய்தது ஆகியவற்றுக்கும் சேர்த்தே அவர் ஆதரவு அளிக்கிறார். அவரது பதவிக்காலம் உலக அமைதிக்கு ஆபத்தானது எனத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்