ட்ரம்ப் மேற்கொண்ட இராணுவத் தலையீட்டுக்கு ஐ.நா கண்டனம்
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட இராணுவத் தலையீட்டை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது.
இது ஒரு "ஆபத்தான முன்னுதாரணமாக" இருப்பதாகவும், அதனால் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
இந்தக் கருத்துக்கள் ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்கள் நடத்திய கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டவை என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதிகாரப்பூர்வ அறிக்கை
ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையோ அல்லது நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை.

சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனம் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்றும், வெனிசுலாவில் உள்ள நெருக்கடி இராணுவத் தலையீடு இல்லாமல் அமைதியாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச்செயலாளரும் மனித உரிமைகள் தலைவரும் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவர வெனிசுலா அதிகாரப்பூர்வமாகக் கோரியுள்ளது.
.@antonioguterres is deeply alarmed by the recent escalation in Venezuela.
— UN Spokesperson (@UN_Spokesperson) January 3, 2026
He continues to emphasize the importance of full respect - by all - of international law, including the UN Charter.
Full statement: https://t.co/2ZJjZkc9S7
.@antonioguterres is deeply alarmed by the recent escalation in Venezuela.
— UN Spokesperson (@UN_Spokesperson) January 3, 2026
He continues to emphasize the importance of full respect - by all - of international law, including the UN Charter.
Full statement: https://t.co/2ZJjZkc9S7
அமெரிக்காவின் நடவடிக்கை
அமெரிக்காவின் நடவடிக்கை பலத்தைப் பயன்படுத்தாத கொள்கையை மீறுவதாகவும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் வெனிசுலா வாதிடுகிறது.
இத்தகைய தலையீடுகள் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், எதிர்கால சர்வதேச உறவுகளுக்கு மிகவும் எதிர்மறையான முன்னுதாரணத்தை அமைக்கும் என்றும் ஐ.நா. மற்றும் அதன் மனித உரிமை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |