தமிழர் விவகாரத்தை ஓரங்கட்டிய ஐ.நா - அம்பலத்துக்கு வந்த தகவல்
'இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான விசாரணைகள் சர்வதேச பொறிமுறையின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற விடயத்தை' ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தவிர்த்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ( Selvaraja Gajendran) சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்மூலம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடி மறைத்து, இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கு சர்வதேசம் முற்படுகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினால் ஏற்படவுள்ள பாதிப்பு என்ற தலைப்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் வவுனியா மறவன்குளம் கிராமத்தில் இன்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
அத்துடன் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் சமஷ்டி மற்றும் வடகிழக்கு இணைப்பை கைவிட்டு ஒற்றையாட்சி அடிப்படையிலான அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பிலும் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பிலும் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
