ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கூட்டத்தில் தீர்மானம்! அமைதி காத்த சீனா - ரஷ்யா
வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்டான் மீதான ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்து, ஈரான் உடனடியாக விரோதப் போக்கை நிறுத்த வேண்டும் என்று கோரி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அமைப்பு ஒரு வரைவுத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது .
வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு (GCC) ஆதரித்த தீர்மானத்திற்கும், 135 பிற ஐ.நா. உறுப்பு நாடுகளால் இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானத்திற்கும் ஆதரவாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அமைப்பின் 15 உறுப்பினர்களில் 13 பேர் வாக்களித்துள்ளனர்.
வரைவுக்கு எதிராக எந்த நாடுகளும் வாக்களிக்கவில்லை.
அதிக ஆதரவு
சீனாவும் ரஷ்யாவும் இதில் வாக்களிக்கவில்லை. ஆனால் குறிப்பாக இந்தத் தீர்மானத்தைத் தடுக்க தங்கள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏனெனில் பாதுகாப்பு அமைப்பில் மட்டுமல்ல, பிற உறுப்பு நாடுகளிலும் இதற்கு அதிக ஆதரவு கிடைத்தமையே காரணம் என சர்வதேச ஊடகங்கள் அடிகோடிட்டுள்ளன.
தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு 135 பிற நாடுகள் இணை அனுசரணை அளித்துள்ளன.
பாதுகாப்பு அமைப்பின் வரைவுத் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகளின் எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என கருதப்படுகிறது.
இந்தத் தீர்மானம் ஈரானின் தாக்குதல்களைக் கண்டிக்கிறது, உடனடியாக இந்த போக்கை நிறுத்தக் கோருவதாக அறியப்படுகிறது.
மேலும் வளைகுடா பிராந்தியத்தில் துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி வசதிகள் போன்ற உள்கட்டமைப்புகளை ஈரான் குறிவைப்பதைக் கண்டிப்பதாகவும் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |