தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு சரியானதென்று இப்போது புரிகிறதா.. சுமந்திரன் சுட்டிக்காட்டு
சுமந்திரன் சுட்டிக்காட்டு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா என எம்.ஏ சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்காவின் அதிபர் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளார்கள்.
இந்தநிலையிலேயே எம்.ஏ சுமந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
Is anyone now left in any doubt that the decision by #TNA to try and stop @RW_UNP becoming @PodujanaParty Executive President was right?
— M A Sumanthiran (@MASumanthiran) July 22, 2022
‘மொட்டு கட்சியின் நிறைவேற்று அதிகார அதிபராக ரணில் விக்ரமசிங்க வருவதை தடுப்பதற்கென்று த. தே. கூ. ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா?“ என அவர் பதிவிட்டுள்ளார்.
கோட்டா கோ கம போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களான ரந்திமல் கமகே, லஹிரு, அனுரங்க உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், இரண்டு ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த பகுதியில் இருந்த சில வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
