பாதாள உலக குழுக்களின் பாசையில் பதிலளிக்க வேண்டும்! எச்சரிக்கும் தேசபந்து
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Deshabandu Tennakoon
By Kathirpriya
பாதாள உலகக் குழுக்களுக்கு அவர்களது மொழியிலேயே பதிலளிக்கப்படும் என காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு புரியக்கூடிய மொழியில் பதிலளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய நாட்களாக இடம்பெற்று வரும் பாதாள உலகக் குழு தாக்குதல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறை மா அதிபர் தென் மாகாணத்திற்கு நேரடியாக விஜயம் செய்திருந்தார்.
இதன்போது கொஸ்கொட காவல் நிலையத்தில் விசேட கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற காவல்துறை மா அதிபர் யுக்திய நடவடிக்கை நிறுத்தப்படாது என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
மரண அறிவித்தல்