பலத்த பாதுகாப்புடன் கட்டுநாயக்கவுக்கு கொண்டுவரப்பட்ட முக்கிய குற்றவாளிகள்
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக கும்பல்களின் தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்களும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இந்தோனேசியாவில் இருந்து ஏற்றிவந்த விமானம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
பல மணி நேர தாமதத்திற்குப் பிறகு இன்று (30) பிற்பகல் 3.30 மணியளவில் இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம் இரவு 7.20 மணியளவில் விமான நிலையத்தை அடைந்தது.
பலத்த பாதுகாப்பு
இந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரியந்த வீரசூரிய, காவல்துறை ஊடகப் பேச்சாளர் வுட்லர் மற்றும் காவல்துறை சிறப்புப் பணிக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் மூத்த அதிகாரிகள் குழுவும் இந்த நிகழ்வைக் கண்காணிக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



